புதன், 4 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தலைமுடியை இயற்கையாக பராமரிக்க உதவும் பூந்தி கொட்டை...!

நாம் பயன்படுத்தும் பலவிதமான சோப்புகளில், சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் தோல் வறட்சி, வியர்வை கோளங்களில் அடைப்பு, ரோமக்கால்களில் அடைப்பு, ரோமங்கள் வெடித்து, தோலின் மென்மையான புற அடுக்கு தடித்து, வீங்கி நிறம் மாறல், நகமும், தோலும் இணையும் இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, அங்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் வளருதல் என பல தொல்லைகள் ஏற்படுகின்றன.
உலர்ந்த பூந்தி கொட்டையைக் உடைத்து, கொட்டையை நீக்கி, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வச்சுக்கோங்க. ஊறவைத்த தண்ணீரில், சீயக்காய்  சேர்த்து தலைக்கு குளிச்சீங்கன்னா, உங்க கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். முடி உதிரலும் குறையும்.
 
பூந்தி கொட்டையின் மற்ற பயன்கள் வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்களைச் சுத்தம் செய்யலாம். இதனைப் பயன்படுத்தி பட்டுத் துணிகளைத் துவைத்தால், சாயம் போகாமல் பட்டு ஜரிகையை பளிச்சென்று இருக்கும்.
 
பேன், பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, வாரமிருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.தினசரி குளியலில் சோப்புக்குப் பதிலாக இந்த பூந்தி  கொட்டையை தேய்த்துக் குளித்தால், தோல் நோய்கள்  நம்மை அண்டாது.  
வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில்  தேய்த்து, அலசி, குளித்துவரலாம்.