செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By

சுவையான கேரட் அல்வா செய்வது எவ்வாறு...!

தேவையானவை:
 
கேரட் - ஒரு கிலோ
பால் - அரை லிட்டர்
நெய் - 50 கிராம்
முந்திரி - 20 முதல் 30
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
செய்முறை:
 
பாலை நீர் ஊற்றாமல் காய்ச்சி வைக்கவும். மற்ற தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். கேரட்டை மேல் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
 
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து துருவிய கேரட்டை மட்டும் சேர்த்து நீர்பதம் வற்ற வதக்கவும். பின் அதில் பால் மற்றும் சீனி சேர்த்து சுருளும்  வரை கிளறவும்.
வேறொரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி முந்திரி, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை வறுத்து வைத்துக் கொள்ளவும். பால் வற்றியதும் அதில் வறுத்த  முந்திரியை சேர்த்து நெய் பிரியும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். நெய் பிந்து வந்ததும் சுவையான கேரட் அல்வா தயார். 
 
குறிப்பு: கேரட்டில் உள்ள இயற்கையான நிறமே போதுமானது. சுவையை கூட்ட கன்டன்ஸ்ட் மில்க் சேர்த்துக் கொள்ளலாம். வெறும் வாணலியில் கேரட்டை நீர் போக வதக்குவதால் பச்சை வாசம் நீங்கும்.