திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (19:36 IST)

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’

அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற தமிழ்ப் படம் ரிலீஸாக இருக்கிறது.
 
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா’. தெலுங்குப் படமான இதை, வம்சி இயக்கியுள்ளார். அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், நதியா, அர்ஜுன், சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படம் தமிழில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் தமிழில் ரிலீஸாக இருக்கிறது. பிற மொழி நடிகர்களுக்கு தமிழில் மார்க்கெட்டைப் பிடிக்கும் ஆசை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால்தான், மகேஷ் பாபு கூட ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்தார். அந்த வரிசையில் தற்போது அல்லு அர்ஜுனும் இணைந்துள்ளார்.