சூர்யா 45 பட ஷூட்டிங்கில் நடந்த விபரீதமான சம்பவம்!
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கியமானக் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் பிரம்மாண்டமான ஒரு பாடல் காட்சியைப் படக்குழுவினர் நூற்றுக்கணக்கான டான்ஸர்களோடு சேர்ந்து சூர்யா நடனமாடுவது போல படமாக்கியுள்ளனர். அப்போது ஒரு துணை நடிகை வெயிலின் தாக்கம் காரணமாக மயக்கமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.