திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (13:41 IST)

தங்கலான் வெற்றிக்கு வாழ்த்திய கங்குவா சூர்யா!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடுபவையாக அமைந்துள்ளன. இந்நிலையில் படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்கவயலில் வேலை செய்த தமிழர்களைப் பற்றிய படமாக தங்கலான் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

படக்குழு பல்வேறு ப்ரமோஷன்களை நாடு முழுவதும் செய்து வருகிறது. இந்நிலையில் தங்கலான் படம் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சூர்யா “இந்த வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் படத்தைப் பார்த்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது. சூர்யாவின் இந்த பதிவு விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.