பத்திரிக்கையாளரிடம் முகம் சுளிக்கும் கேள்வியைக் கேட்ட விக்ரம்… கிளம்பிய சர்ச்சை!
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடுபவையாக அமைந்துள்ளன. படம் ஆகஸட் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்கவயலில் வேலை செய்த தமிழர்களைப் பற்றிய படமாக தங்கலான் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் விக்ரம் கலந்துகொண்டு வருகிறார். இதையடுத்து நடந்த ப்ரஸ்மீட் நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம்மிடம் பத்திரிக்கையாளர்கள் கிடுக்குப் பிடி கேள்விகளைக் கேட்டனர். அதில் ஒரு கேள்வி “உங்களால் ஏன் டாப் 3 நடிகர்களுக்குள் ஒருவராக வரமுடியல்லை” எனக் கேட்கப்பட்டது.
இதுபோன்ற கேள்விகளை எதிர்கொண்ட விக்ரம் ஒரு பத்திரிக்கையாளரிடம் “உங்கள் மனைவி ஓடிப் போய்விட்டாரா” என வாய்விட்டு, அங்கிருந்தவர்களை முகம் சுளிக்கவைத்தார். இது சம்மந்தமான வீடியோ துணுக்கு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தங்கலான் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் விக்ரம்மின் இந்த பேச்சு தேவையில்லாதது என கருத்துகள் சமூகவலைதளங்களில் எழுந்துள்ளன.