விக்ரம்மின் கேரியர் பெஸ்ட் இதுதான்… தங்கலான் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை இவ்வளவா?
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடுபவையாக அமைந்துள்ளன. படம் ஆகஸட் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்கவயலில் வேலை செய்த தமிழர்களைப் பற்றிய படமாக தங்கலான் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
இன்னும் இரண்டு நாட்களில் இந்த படம் ரிலிஸாகவுள்ள நிலையில் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை விக்ரம்மின் எந்த படத்துக்கும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையானது இல்லை எனும் அளவுக்கு 25 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம்மின் முந்தைய படங்கள் சில ப்ளாப் ஆன நிலையிலும் பா ரஞ்சித் இருப்பதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.