ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (09:39 IST)

வாடிவாசல் என்னாச்சு… சமீபத்தில் நடந்த சூர்யா- வெற்றிமாறன் சந்திப்பு!

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை இன்னும் முடிக்கவில்லை. அதனால் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் இப்போது சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் சந்தித்து வாடிவாசல் குறித்து உரையாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் வாடிவாசல் படம் குறித்த அப்டேட் வெளியாகலாம் என தெரிகிறது.