ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (16:50 IST)

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

ஒரு மனிதன் மேம்பட்ட மனிதராக மாற பயணம் தான் சிறந்த கல்வி என்று நடிகர் அஜித் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பது மட்டுமின்றி, பல நேரங்களில் பயணம் செய்வதும், அவர் பைக் மற்றும் காரில் பயணம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

பைக்கில் இந்தியா முழுவதும் பயணம் செய்துவிட்ட அஜித், அடுத்ததாக உலகம் முழுவதும் பயணம் செய்ய இருப்பதாகவும், அதுமட்டுமின்றி கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில், சற்றுமுன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில், "நீங்கள் பயணம் செய்யும் போது தான் மேம்பட்ட மனிதராக மாற முடியும். பயணம் தான் கல்வியின் சிறந்த வழி" என்று கூறியுள்ளார்.

ஒரு பழமொழி உண்டு, "நீங்கள் முன்பு பார்க்காத மக்களையும் உங்களது மதம் வெறுக்க வைக்கும் மதம், ஜாதி எதுவாக இருந்தாலும், அந்த பழமொழியில் வருவது உண்மை. நாம் மக்களை பார்க்காமலேயே கூட அவர்களை மதிப்பிட முடியும். பயணம் தான் மக்களை புரிந்து கொள்ள உதவும். பயணத்தின் மூலம், உங்களை சுற்றியுள்ள மக்களை புரிந்துகொள்ள தொடங்குவீர்கள். அது உங்களை மேம்பட்ட மனிதராக மாற்றும்" என்று கூறியுள்ளார்.

நடிகர் அஜித்தின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



Edited by Mahendran