''ராயன்''படத்தில் இணைந்த செல்வராகவன்!
நடிகர் தனுஷின் 50வது படம் ராயன். இப்படத்தை அவரே இயக்கி நடித்து வரும் நிலையில், சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வரும் நிலையில், நேற்று இப்படத்தின் அடுத்த போஸ்டர் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தது.
ஏற்கனவே சந்தீப் கிஸன், காளிதாஸ் ஆகியோர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நேற்று இணைந்தார்.
ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நேற்று மாலை சன்பிக்சர்ஸ் வெளியிட்டது. இது சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், இப்படத்தில் செல்வராகவன் இணைந்துள்ளார் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து, புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நேற்று, ''நண்பர்களே ராயன் படத்திற்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியதாக செய்திகள் உலா வருகின்றன. எனக்கும் ராயன் ஸ்கிரிப்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது முற்றிலும் தனுஷின் கனவு ஸ்கிரிப்ட் இந்த ப்ராஜெக்டில் நான் வெறும் ஒரு நடிகன் மட்டுமே என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.