புதன், 11 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (18:19 IST)

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி தொடங்க இருக்கிறது. கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், அதில் இருந்து விலகிக் கொண்டார். இப்போது அவருக்குப் பதிலாக நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனை பிக்பாஸ் குழு ரகசியமாக வைத்திருந்தாலும் சில பெயர்கள் வெளியில் கசிந்துள்ளன.

இந்நிலையில் பிக்பாஸ் துவக்க நாள் நிகழ்ச்சி நேற்றே படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி க்ளின் ஷேவ் லுக்கில் “பிக்பாஸ் வீடும் ரெடி, போட்டியாளர்களும்  ரெடி, நானும் ரெடி. வீடு ரொம்ப அழகாக இருக்கு” எனப் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.