1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (21:28 IST)

செல்வராகவன் பற்றி பதிவிட்டு நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி!

dhanush, selvaragavan
ராயன் படத்தில் நடிக்கும் செல்வராகன் போஸ்டர் வெளியான நிலையில், இதுகுறித்து நடிகர் தனுஷ் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகர் தனுஷ். இவரது 50வது படம்  ராயன். இப்படத்தை  அவரே இயக்கி நடித்து வரும்  நிலையில், சன்பிக்சர்ஸ்  தயாரித்து வருகிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வரும்  நிலையில்,   இப்படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகி இப்படம்  தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தது.
 
ஏற்கனவே சந்தீப் கிஸன், காளிதாஸ் ஆகியோர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நேற்று  இணைந்தார்.
 
ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை  நேற்று மாலை  சன்பிக்சர்ஸ் வெளியிட்டது. இது சமூகவலைதளங்களில் வைரலானது.
 
இந்த நிலையில், இப்படத்தில் செல்வராகவன் இணைந்துள்ளார் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து, புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
இன்று ராயன் படத்தில் நடிக்கும் செல்வராகன் போஸ்டர் வெளியான நிலையில், இதுகுறித்து நடிகர் தனுஷ் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
 
உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று தனது எக்ஸ் தளத்தில்  நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
 
இதற்கு செல்வராகவன், வாய்ப்பிற்கு நன்றி இயக்குநர் சார்.  உங்களை நினைத்துப் பெருமைகொள்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
 
இருவருக்கும் சினிமாத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.