1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (18:25 IST)

பிரபல ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ! ரசிகர்கள் ஆர்வம்

உலக அளவில் மிகப்பிரபலமான பொழுதுப்போக்கு விளையாட்டு டபள்யு,டபள்யு.இ (WWE) குத்துச்சண்டை போட்டி. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருமே இந்த விளையாட்டினை பார்ப்பதில் ஆர்வம் கொள்வர். அதனால் உலகம் முழுவதும் இவ்விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம்.
குறிப்பாக இதன்  விளையாட்டு வீரர்களான ராக் , ஜான் சீனா, அண்டர்டேக்கர், டிரிப்பிள் ஹெச், மார்க் கென்றி, பிக் ஷோ, ரோமன் ரெய்ன்ஸ்  போன்றோர் புகழ்பெற்று விளங்குகின்றனர்.
 
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ஜான் சீனா WWE ல் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது அவர் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
அதாவது உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள  ஃபாஸ்ட் அண்ட் ஃபுயூரியஸ் 9 படத்தில் அவர் நடிக்கவுள்ளார். ஏற்கனவே ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்
மார்க் டுவைன் (ராக் )தான் இதற்கு முன்னர் வெளிவந்த ஃபாஸ்ட் அண்டு பியூரியஸ் அத்துனை சீரியஸ்  படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.