வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (16:23 IST)

மன உளைச்சல்...விருதுகளை திருப்பிக் கொடுக்க இளையராஜா முடிவு !

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாந்த் ஸ்டுடியோ விவகாரத்தில் ஏற்பட்ட மனவுளைச்சல் காரணமாக மத்திய, மாநில அரசு விருதுகளைத் திருப்பித்தர இளையராஜா முடிவு எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இந்திய சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளவ இசைஞானி இளையராஜா.

இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தனது ஒலிக்கூடமாகப் பயன்படுத்தி வந்தார் அவர்.இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்த நிலையில் சமீபத்தில் இளையராஜா ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம்செய்ய அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, அவரது  விருதுகள்,பொருட்கள் உள்ளிட்டவைகள் ஒலிக்கூடத்தைவிட்டு வெளியே வைக்கப்பட்டிருந்தால் இளையராஜா தியானம் செய்யவில்லை.

இது அவருக்கு பெரும் மனவுளைச்சலை ஏற்படுத்தியதாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்து இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தினா கூறியதாவது: இளையராஜா பிராசத் ஸ்டுடியோ செல்லும்போது தடுத்து நிறுத்தபட்டார். அதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். மூத்த இசைக்கலைஞருக்கு ஏற்பட்ட அவமானத்தை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைபார்த்தது. எனவே அவர் விருதுகள் அனைத்தையும்  திரும்பிக் கொடுக்கவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.