இன்று பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார் இளையராஜா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ilaiyaraja
இன்று பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார் இளையராஜா
siva| Last Updated: திங்கள், 28 டிசம்பர் 2020 (07:43 IST)
இசைஞானி இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ இடையே நடைபெற்ற வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது பிரசாத் ஸ்டூடியோவில் ஒருநாள் தியானம் செய்ய தனக்கு அனுமதி வேண்டும் என புதிய மனு ஒன்றை இளையராஜா தாக்கல் செய்தார்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகிகளிடம் இளையராஜாவுக்கு ஒருநாள் அனுமதி வழங்கலாம் என்று அறிவுறுத்தினார். நீதிபதிகளின் அறிவுறுத்தலை அடுத்து ஒரு நாள் மட்டும் இளையராஜா தியானம் செய்ய பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகிகள் அனுமதித்தனர். ஆனால் அதிலும் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட இளையராஜா விரைவில் பிரசாத் ஸ்டூடியோ சென்று ஒரு நாள் மட்டும் தியானம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இன்று காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா செல்கிறார் என்றும் உதவியாளருடன் செல்லும் இளையராஜா இன்று ஒருநாள் தியானம் செய்துவிட்டு தங்கள் தனக்கு சொந்தமான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இளையராஜா இன்று பிரசாத் ஸ்டூடியோவுக்கு தியானம் செய்ய வரவிருப்பதால் பத்திரிகையாளர்கள் அதிகம் கூட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன


இதில் மேலும் படிக்கவும் :