இளையராஜா ஸ்டுடியோ அறை உடைப்பு! – பிரசாத் ஸ்டுடியோ செயலால் பரபரப்பு

ilaiyaraja
Prasanth Karthick| Last Modified திங்கள், 28 டிசம்பர் 2020 (13:56 IST)
பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்ல இளையராஜாவுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அவரது அறை உடைக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பல ஆண்டுகளாக இளையராஜா தனது படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், வழக்கை திரும்ப பெற்றால் அனுமதிப்பதாக பிரசாத் ஸ்டுடியோ தெரிவித்ததால் வழக்கை திரும்ப பெற்றார்.

இந்நிலையில் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ செல்லவும், தியானம் செய்து கொள்ளவும் ஒருநாள் அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இளையராஜா தனது பொருட்களை வைத்திருந்த அறையை பிரசாத் ஸ்டிடுடியோ நிர்வாகம் உடைத்து அங்கிருந்த பொருட்களை எடுத்து குப்பை போல போட்டிருந்ததாக இளையராஜா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா தான் வாங்கிய பத்மபூஷண் விருது முதல் பழைய புகைப்படங்கள் வரை பலவற்றையும் அங்கு வைத்திருந்த நிலையில், அவரது அனுமதி இல்லாமல் பூட்டை உடைத்து பொருட்களை எடுத்து வேறு இடத்தில் போட்டது இளையராஜாவை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் இதுகுறித்து இளையராஜா தரப்பில் வழக்கு தொடர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :