வியாழன், 14 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (17:23 IST)

சீனாவில் ஸ்ரீதேவியின் படம் ! மறைந்த பின்பும் சாதனை படைக்கும் மயில்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் "மாம்" திரைப்படம்  சீனா நாட்டில் திரையிடப்பட உள்ளது.


 
இந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என பெருமையோடு அழைக்கப்படுபவர் நடிகை ஸ்ரீதேவி. அந்த அளவிற்கு தென்னிந்திய சினிமா உலகில் தன் நிகரின்றி திகழ்ந்த ஸ்ரீதேவி ஹிந்தி சினிமா உலகிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்தார் .
 
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்த ஸ்ரீதேவி, சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டு குடும்ப வாழக்கையை கவனித்து வந்தார். பிறகு நீண்ட இடைவெளிவிட்டு மீண்டும்  தமிழில் விஜய்யின் புலி படத்தில் நடித்தார். பிறகு அஜித்தின் இங்கிலிஸ் விங்கிலீஷ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி.
 
ரவி உத்ய‌வர்இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான மாம் திரைப்படம்  சீனா தவிர மற்ற நாடுகளில் திரையிடப்பட்டது. ஸ்ரீதேவியின் 300-வது திரைப்படமான மாம்  த்ரில்லர் படமாக அமைந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார்.மேலும் இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. ஜீ ஸ்டுடியோ மாம் படத்தை சர்வதேச நாடுகளில் திரையிட்டது. 
 
"அம்மா"க்களை மையமாக  கொண்ட மாம் படம்  மாற்றாந்தாய் மற்றும் மகள் பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்ததால் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. 


 
இந்நிலையில் தற்போது இரண்டு வருடங்கள் கழித்து "மாம்" படம்   சீனவில் நாட்டில் வருகிற மார்ச் 22ல் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .