1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 பிப்ரவரி 2019 (11:21 IST)

தல ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி! நீண்ட வருட கொள்கையை தளர்த்து அஜித் கலந்துகொள்ள போகும் முதல் நிகழ்ச்சி.!

தமிழ் சினிமா ரசிகர்களின் தலையாய நடிகர் அஜித் கடந்த சில ஆண்டுகாளாகவே எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, பாராட்டு விழாவிற்கோ,  ஏன் தன் நடிப்பில் வெளிவரும் படத்தின் வெற்றி விழாவிற்கு கூட கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறார். 


 
கலைஞர் பாராட்டு விழாவின் போது நேரடியாக இதை தெரிவித்தார். பொது நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சிகளில்  நடிகர்களை வற்புறுத்துகிறார்கள் என்று கூறிய அஜித்  அதற்கு பிறகு எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை.
 
இந்நிலையில் அஜித் தன் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இத்தனை ஆண்டுகளாக தான் கடைபிடித்து வந்த கொள்ளகையை பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவிக்காக தகர்த்தெறிந்து பல பிரபலங்கள் கூடும் ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் பங்கேற்கவுள்ளார். 
 
நடிகை ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 24 ஆம் தேதி சென்னையில் நடத்த  திட்டமிட்டுள்ளனர்.  இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் நண்பரான தல அஜித் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.