ஸ்ரீதேவி மறைந்த தினம் இன்று! ஜான்வி உருக்கமான பதிவு

VM| Last Updated: ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (10:38 IST)
மயிலு என செல்லமாக அழைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி சிவகாசி அருகே குக்கிராமத்தில் பிறந்து, கோலிவுட், பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டியவர். 
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் மிகப் பிரபலமான நடிகை என்றால் அது ஸ்ரீதேவிதான். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். 
 
துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி குளியலறை தொட்டியில் உயிரிழந்தார். அதிகப்படியான மது போதையே அவரது உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் அப்போது கூறினார்கள். 
 
ஸ்ரீதேவியின் மறைவு இந்திய சினிமா துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்ரீதேவி மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவரைப் பற்றி அவரது மகள் ஜான்வி உருக்கமாக பதிவிட்டுள்ளார். 
 
அதில் நான் எப்போதும் மன அழுத்தத்துடனே காணப்படுகிறேன். இருப்பினும் சிரித்து கொண்டே இருக்கிறேன் ... ஏனெனில் என்னுடன் நீங்கள் எப்போதும் இருப்பதால் ....! என குறிப்பிட்டுள்ளார். ஜான்வியின் இந்த பதிவிற்கு பலர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :