திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (09:04 IST)

வெப் தொடராக பொன்னியின் செல்வன்!? – மணி சாருக்கு டஃப் கொடுப்பாரா சௌந்தர்யா?

மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக எடுத்து வரும் நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த அதை வெப் சிரிஸாக எடுப்பதாக அறிவித்துள்ளார்.

1950களில் அமரர் கல்கி எழுதிய வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன். தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதலே இதை படமாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். நீண்ட கால கனவு திட்டமான பொன்னியின் செல்வனை தற்போது இயக்குனர் மணிரத்னம் படமாக எடுத்து வருகிறார். இதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் “ஒவ்வொரு படைப்புக்கும் பயணமும் இலக்கும் இருக்கிறது. பல தடைகளை தாண்டி பொன்னியின் செல்வன் சீசன் 1 வெப் தொடரை நாங்கள் தொடங்கி இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடையை திறமையான குழுவினருடன் அடுத்த அடியை எடுத்து வைப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அனிமேசன் படமான கோச்சடையான், தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 ஆகியவற்றை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இந்நிலையில் தான் வெப் சிரிஸ் இயக்குவதாக அவர் அறிவித்துள்ள நிலையில் அது அனிமேஷன் தொடரா? லைவ் ஆக்‌ஷன் தொடரா? என்ற விவாதங்கள் எழுந்துள்ளது.