திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 11 செப்டம்பர் 2021 (23:22 IST)

கர்ப்பிணிகள் அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய விஷயங்கள்...!

கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். கர்ப்ப காலத்தில் வாந்தி வரும் இதனால் சாப்பிடமால் இருக்கக்கூடாது. பல வேளைகளாக பிரித்து சாப்பிடலாம்.  உணவில் பச்சைக்காய் கறிகள், பழங்கள், அதிகம் இருக்க வேண்டும்.
 
கர்ப்பிணிகள் வயிறு எப்போதும் காலியாக இருக்க கூடாது. உடல் சோர்வாக இருக்கும் போது ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். குமட்டுதல் வரும்போது எலுமிச்சை பழத்தை நுகர்ந்தால், குமட்டுதல் குறையும்.
 
இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். பேரிச்சை, மாதுளை, கீரை வகைகள், முருங்கை கீரை சாப்பிடலாம். வெல்லம் சேர்த்த உணவு வகைகளை உண்ணலாம்.
 
காபி, டீயை தவிர்த்து பாலுடன் வேறு ஏதாவது கலந்து சாப்பிடலாம். உணவில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து கொள்ளலாம். காலையில் பழச்சாறு அதிகம் குடிக்க வேண்டும். மாதுளை பழம் சாப்பிடலாம்.
 
கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிடுவதால் உடல் லேசாக கருத்து காணப்படும் , இது பிறகு மாறிவிடும் .இதனால் குழந்தை  கருப்பாக பிறக்கும் என்பது தவறு.
 
கர்ப்பிணி பெண்கள் காலையில் சீக்கிரமாக சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் சர்கரையின் அளவு குறையாமலிருக்கும், அடிக்கடி மயக்கம் வராது. பிரசவ காலத்திற்கு பின் உடற்பயிற்சி செய்யவேண்டும் அது வயிற்று தசைகளை வலுபெற செய்யும்.
 
கர்ப்பிணிகள் தினம் ஒரு வாழை பழம் சேர்த்து கொள்ளலாம் .இது உடல் சூட்டை தணிக்கும், மலசிக்கல் வராமால் தடுக்கிறது. கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் மலசிக்கல் தடுக்கப்படும்.