திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 அக்டோபர் 2020 (16:01 IST)

சூரரைப் போற்று மீண்டும் எடிட் – ஓடிடிக்காக படக்குழு எடுத்த முடிவு!

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நீளத்தைக் குறைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூர்யா கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் பாத்திரத்தில்தான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரிலிஸூக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் இப்போது படக்குழுவினர் படத்தின் நீளத்தைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இருந்த 2 .24 மணி நேரத்தை இன்னும் குறைப்பது ஏன் என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.