படப்பிடிப்பை தொடங்கிய விஷால் ஆர்யா படக்குழுவினர் –ஹைதராபாத் சென்ற படக்குழு!

Last Modified சனி, 17 அக்டோபர் 2020 (10:54 IST)

நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதரபாத்தில் தொடங்கியுள்ளது.

விஷால் நடிப்பில் ஆனந்த ஷங்கர் இயக்கும் புதிய படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இருவரும் இரும்புத்திரை படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்தார்.

இந்த படத்தின் கதாநாயகியாக டப்ஸ்மாஷ் பிரபலம் மிருனாளினி ரவி நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர் டி ராஜசேகரும் தயாரிப்பாளராக தனுஷின் முன்னாள் மேனேஜரான வினோத்குமார் என்பவரும் பணியாற்றினர்.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. விறுவிறுவென படப்பிடிப்பை முடித்து விரைவில் படத்தை ரிலிஸ் செய்யும் முனைப்பில் உள்ளதாம் படக்குழு.



இதில் மேலும் படிக்கவும் :