15 ஆண்டுகள் கழித்து காதலரை சந்தித்த சோனியா அகர்வால்

Last Modified ஞாயிறு, 30 ஜூன் 2019 (21:30 IST)
 
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று '7ஜி ரெயின்போ காலனி. கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகிய இருவரும் கதிர், அனிதா ஆகியோர் வித்தியாசமான காதலர்கள் கேரக்டர்களில் நடித்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜாவின் அருமையான இசையில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 
 
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்றிரவு ஒரு நிகழ்ச்சியில் ரவிகிருஷ்ணாவும் சோனியாவும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இருவரும் காதலர்களாக நடித்த படத்தினை நினைவு கொண்டு மகிழ்ந்ததாக சோனியா அகர்வால் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.
 
ரவிகிருஷ்ணா கடந்த 2011ஆம் ஆண்டு 'ஆரண்ய காண்டம்' படத்திற்கு பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதேபோல் சோனியா அகர்வாலும் அவ்வப்போது சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தாலும் பெரிய வாய்ப்பு ஒன்றும் அவருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் இருவருக்கும் கதிர், அனிதா கேரக்டர்கள் இன்னும் புகழை பெற்று தருகின்றன என்றால் அவர்கள் செல்வராகவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்


இதில் மேலும் படிக்கவும் :