செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 20 ஜனவரி 2019 (16:56 IST)

'தனிமை'யில் சோனியா அகர்வால்!

செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன் பிறகு தம், கோவில், 7ஜி ரெயின்போ காலனி, மதுர, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 
 
இவருக்கும் இயக்குநர் செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னாளில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். சிலகாலம் இருவரும் ஒற்றுமையாக குடும்பம் நடத்தினார்கள். 
 
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சோனியா அகர்வால் செல்வராகவன் ஜோடி விவகாரத்து செய்து கொண்டனர். விவாகரத்துக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் சோனியா அகர்வால். 
 
தற்போது அவர் ஒரு மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர 'தனிமை' என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு தமிழ் படத்திலும் சோனியா அகர்வால் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட இப்படத்தை சிவராமன் இயக்குகிறார்.