நீச்சல் குளத்தில் செளந்தர்யா ரஜினிகாந்த்: நெட்டிசன்கள் கலாய்த்ததால் டெலிட் செய்யப்பட்ட புகைப்படம்

Last Modified ஞாயிறு, 30 ஜூன் 2019 (20:52 IST)
மகனுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்த செளந்தர்யா ரஜினிகாந்த், அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்களிடம் இருந்து கலாய்ப்பும் கண்டனமும் வந்தால் நீக்கிவிட்டார்
ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு நீச்சல் பழகி கொடுக்க வேண்டும் என்றும், நீச்சல் என்பது மிகவும் முக்கியமானது என்றும், தனது குழந்தை வேத் தற்போது நீச்சல் பழகி வருவதாகவும் புகைப்படத்துடன் ஒரு டுவீட்டை செளந்தர்யா ரஜினிகாந்த் பதிவு செய்தார்

ஆனால் தமிழகம் முழுவதும் தற்போது தண்ணீர் கஷ்டத்தில் இருக்கும் நிலையில் நீங்கள் ஒய்யாரமாக நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்வது தேவைதானா? என்று நெட்டிசன்கள் பலர் கலாய்த்து கண்டனமும் செய்தனர். இதனையடுத்து நான் சொல்ல வந்த கருத்து குழந்தைகளின் நலனை குறித்தது என்றும் இருப்பினும் மக்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டேன் என்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
எதற்கெடுத்தாலும் குறை சொல்லி வரும் நெட்டிசன்கள், ஒரு நல்ல விஷயத்தை சொல்ல வந்த செளந்தர்யா ரஜினிகாந்த்தையும் கலாய்த்தது கண்டனத்துக்குரியது என்று அதே டுவிட்டரில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :