குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட சோனம் கபூர்!
பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அதை முன்னிட்டு தற்போது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகள் சோனம் கபூர். நடிகை சோனம் கபூர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் கடந்த 2018 ஆம் ஆண்டு சாபரியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அந்த ஆண்டில் பிலிம்பேர் நடிகைக்காக சிறந்த அறிமுக விருது அவருக்குக் கிடைத்தது. அதே ஆண்டில் ரன்கபீருடன் இணைந்து ஸ்டார் ஸ்கிரீன் விருது அவருக்குக் கிடைத்தது.
இவர் தொழிலதிபரான ஆனந்த் அகுஜா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வாயு கபூர் அகுஜா எனப் பெயர் வைத்துள்ளனர். மேலும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.