கணவன் வெளிநாட்டில்.. வாலிபருடன் என்ஜாய் செய்த மனைவி! – போட்டோவை கண்டு கலங்கிய கணவன்!
ஒரத்தநாடு அருகே 40 வயது பெண்மணி கல்லூரி படிக்கும் மகன்களை விட்டுவிட்டு 25 வயது இளைஞருடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். முதல் மகன் பொறியியல் படித்துவிட்டு வேலை பார்த்து வருகிறார்.
கணவர் சிங்கப்பூரிலிருந்து அனுப்பும் பணத்தில் அந்த குடும்பம் வசதியாகவே வாழ்ந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த வீட்டு பெண்மணி தனது மகன்கள் வெளியே சென்றபின் முகநூலில் பலரோடு பேசி வந்துள்ளார்.
அப்படி பேசியதில் காரைக்காலை சேர்ந்த 25 வயது இளைஞருடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காரைக்காலில் இருந்து ஒரத்தநாடு வந்த அந்த இளைஞர் அங்கு ஆட்டோ ஓட்டிக் கொண்டு அந்த பெண்மணியை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததில் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து தனது மகன்களுக்கு தெரியும் முன்னர் வீட்டிலிருந்து நகை, பணத்தை எடுத்துக் கொண்டு அந்த இளைஞருடன் ஓடியுள்ளார். காரைக்காலில் ஒரு கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதுடன் அந்த புகைப்படத்தையும், ஆடியோ ஒன்றையும் தனது சிங்கப்பூர் கணவருக்கு அனுப்பியுள்ளார் அந்த பெண்.
தனது குடும்ப நலனிற்காக வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வந்த அந்த கணவர் தன் மனைவியின் இந்த செயலை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.