வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (16:38 IST)

''ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ''நிறுவனத்தில் சிறிய மாற்றம்!

sembi
தமிழ் சினிமாவில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். இந்த நிறுவனம் சார்பில்  விஜய்யின் குருவி, சூர்யாவின் ஆதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருந்தார்.

சமீபத்தில், கமல் தயாரித்து  நடித்த விக்ரம் படத்தை  உதய  நிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம்  திரையரங்குகளில்  வெளியிட்டிருந்தது. இப்படதை அடுத்து, விஜய்யின் வாரிசு படத்தையும் 4 இடங்களில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட உள்ளது.

இந்த நிலையில், பிரபு சாலமன் இயக்கத்தின்  அஸ்வின் குமார், கோவை சரளா நடிப்பில் இன்று வெளியான செம்பி படத்தையும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில், இளைஞன் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாடுத்துறை அமைச்சராக உதய நிதி பதவியேற்றதை அடுத்து, அவரது ரெய் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் பொறுப்பை அவர் மனைவி கிருத்திகா கடந்த புதன் கிழமை ஏற்றுள்ளதாகவும், இனிமேல் அவர் தான் அந்த  நிறுவனத்தை நிர்வகிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று வெளியான செம்பி படத்தை விநியோக உரிமை பெற்றுள்ள ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் ''உதயநிதி ஸ்டாலின் வழங்கும்'' என்ற பெயர் இடபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.