வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified திங்கள், 28 நவம்பர் 2022 (17:31 IST)

பிறந்த குழந்தைக்கு உதய நிதி பெயர் சூட்டி, மொய்வைத்த அமைச்சர்!

subramanian
உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு உதயநிதி என்று பெயர் வைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான  உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

உதகையில்   நேற்றுப் பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

அதேபோல், உதய நிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு உதய நிதி என்று பெயர் வைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதேபோல், இன்னும் 4 குழந்தைகளுக்கு  உதய சரியன், தமிழினியன், தமிழன்பன், தமிழ் செல்வன் என்று பெயர் வைத்து ஆயிரத்தொடு ரூபாய் மொய் வைத்தார்.

 
Edited by Sinoj