1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (20:52 IST)

''கலகத்தலைவன்'' படம் பார்த்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

stalin udhay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்  பல முன்னணணி நடிகர்களின் படங்களை விநியோகிப்பதுடன் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

 
இந்த நிலையில், மகிழ்திருமேனி இயக்கத்தில், உதய நிதி  நடித்துள்ள படம் கலகத் தலைவன். இப்படத்தில் அவருடன் இணைந்து  நிதி அகர்வால், பிக்பாஸ் ஆரவ், கலையரசன்  உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஆக்சன் பட பாணியில் உருவாகியுள்ள இப்படம்  நாளை ( நவம்பர் 18 ஆம் தேதி)தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், உதய நிதியின் ரசிகர்கள் மற்றும் திமுக உடன்பிறப்புகள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள  இப்படத்தை இன்று முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் இன்று பார்த்துவிட்டு,  நடிகர் உதய நிதியையும், படக்குழுவினரையும் அவர் பாராட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர்  வெளியீட்டு கடந்த 10 ஆ ம் தேதி  நடந்தது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj