வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (20:18 IST)

சிவார்த்திகேயனின் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா'

கனா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷை ஹீரோயினாக கொண்டு தனது நண்பர் அருண் காமராஜ் இயக்கத்தில் கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். 
 
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரியோவை வைத்து புதிய படம் ஒன்றை புரொடக்ஷன் நம்பர் 2 என்ற பெயரில் சிவகார்த்திகேயன் தயாரித்து வந்தார். 
 
இந்த படத்துக்கு 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' என்று சிவகார்த்திகேயன் பெயர் வைத்துள்ளார். இப்படத்தை ஸ்மைல் சேட்டை யூ டியூப் சேனல் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சபீர் இசையமைத்துள்ளார். 
 
கதாநாயகியாக ஷெரில் நடிக்க, நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், யூ டியூப்பில் பிரபலமானவர்களை ஒன்றிணைத்து, இந்தப் படத்துக்காக ஒரு பாடலையும் படமாக்கியுள்ளனர்.