சிவகார்த்திகேயன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

sinoj| Last Modified சனி, 3 ஜூலை 2021 (23:09 IST)

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் என்ற படத்தின் ரிலீஸ் தேதி
குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அருவி படத்தை இயக்கியவர் அருண்பிரபு புருஷோத்தமன். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் மூன்றாண்டுகள் கழித்து இயக்கியுள்ள படம் வாழ்.


இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவுற்று
ரிலீஸுக்குத் தயார் நிலையில் உள்ளது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :