செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (20:14 IST)

தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்து தெரிவித்த டாக்டர் ராமதாஸ்!

இன்று நாடு முழுவதும் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து குரானா வைரஸ் நேரத்தில் பணிபுரிந்து வருவதற்கு நன்றி தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
குறிப்பாக பிரதமர் மோடி தேசிய மருத்துவர் தினத்தை ஏற்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் அதேபோல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உள்பட பல மாநில முதல்வர்கள் மருத்துவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தேசிய மருத்துவர் தினம் குறித்து கூறியிருப்பதாவது:
 
அன்னை, தந்தை, ஆசிரியர், கடவுள் வரிசையில் கடவுளுக்கு முன்பாக வைத்து போற்றப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள். தங்களை வருத்திக் கொண்டு மக்களைக் காத்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்