’ஸ்டாலின் தான் வராரு’ இசையமைப்பாளர் திருமணம் !ஸ்டாலின் வாழ்த்து

sinoj| Last Updated: வியாழன், 1 ஜூலை 2021 (22:28 IST)

ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறாரு என்ற பாடலின் இசைமைப்பாளர் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் நேரடியாகக் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மை வெற்றி பெற்றது.

இத்தேர்தலின்போது, திமுகவினர் ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு என்ற பாடல் தமிழகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. திமுகவினரின் கட்சிக்கு பெரும் பிரச்சாரமாகவே இப்பாடல் அமைந்தது.

இப்பாடலை இசையமைத்தவர் ஜெரார்ட் ஃபெலிக்ஸ். இவர் இதற்குப் பின்னர் ஒரு ஆல்பம் பாடல் இசையமைத்தார். இப்பாடல்களை உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் ஜெரார்டு ஃபெலிக்ஸீக்கும் பிரேஷி சாந்தனாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு தம்பதியரை வாழ்த்தினார்இதில் மேலும் படிக்கவும் :