"அது மட்டும் தான் இன்னும் பிக்பாஸில் காட்டவில்லை" விளாசிய பிரபலம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்து பல தரப்பினரிடையே எதிர்ப்புகளும் கடும் விவாதங்களும் எழுந்து வருகிறது. ஆனாலும் அதையெல்லாம் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் வரை சென்று தொடர் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
அதற்கு முக்கிய காரணமே பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதம் தான். பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டும் , ஆண்களை சகஜமாக கட்டிப்பிடித்து கொண்டும் இருக்கிறார்கள் என பலரும் குற்றிம் சாட்டிவருகின்றனர்.
அந்தவகையில் தற்போது பிரபல பாடகரான அந்தோணி தாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை குறித்து பேட்டி ஒன்றில் காட்டமான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். முதல் சீசனில் மருத்துவ முத்தத்தை அறிமுகப்படுத்தினார்கள். தற்போது கட்டிப்பிடிப்பதை அறிமுகம் செய்துள்ளனர். காரணமே இல்லாமல் எல்லாவற்றிற்கும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டு பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறார்கள்.
இன்னும் கொஞ்சம் நாட்கள் போனால் 4 சுவற்றுக்குள் நடக்கும் விஷயங்களையும் காட்டுவார்கள். வயதிற்கு வந்த பெண்களை பிக்பாஸை பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு பதிலாக நம் கலாச்சாரத்தையும், விவசாயத்தையும் பலபடுத்த வழி வகை செய்யலாம் என்று அந்தோணி தாசன் கூறியுள்ளார்.