வெளியில் சென்ற பிறகும் இதே காதலோடு காத்திருப்பேன் உனக்காக...!

Last Modified வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (17:49 IST)
பிக்பாஸ்  நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்துக்கொண்டு "உண்மையை சொல்லு இல்ல சொன்னதை செய்" என்று கூறி பாட்டிலை சுழற்றி விட்டு அது யார் பக்கம் திரும்புகிறதோ அவர் மற்றவர்கள் கேட்பதை கூறவேண்டும்.


 
இதில் பாட்டிலை சுழற்றி விட்டதும் அபிராமியின் பக்கம் திரும்புகிறது. " இது தான் உன்னோட கடைசி நாள் இன்றோடு நீ வெளியேறி போகுற இப்போ கடைசியா நீ முகனிடம் என்ன வந்து பேசுவ அதை கூறு என தர்ஷன் அபிராமியிடன் சொல்கிறார் .
 
அதற்கு அபிராமி " உன்கூடவே வெளியில் வரணும் அப்டின்னு நெனச்சேன் ஆனால், அது நடக்கவில்லை. நான் உன்ன ரொம்ப அதிகமாக லவ் பண்ணுறேன். கண்டிப்பாக ஜெயிச்சுட்டு நீ வரணும். வெளில போனால் இது மாறிடும் அப்டின்னு நீ நினைக்கலாம். ஆனால் நான் மாறமாட்டேன். நான் உன்னை காதலிச்சுட்டு இப்படியே தான் இருப்பேன். கண்டிப்பாக நான் உன்னை மிஸ் பண்ணுவேன் என்று கூறுகிறார் . இதையெல்லாம் கேட்டு முகன் மெளனமாக சிரிக்கிறார். 
 
இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்ஸ், "போதும் உன் காதல் டிராமா ..அப்படி போ ஓரமா" என கடுப்பில் கூறிவருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :