திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 6 ஜூன் 2018 (21:02 IST)

நான் ரஜினி ஆக முயற்சிக்கவில்லை - சிம்பு வெளியிட்ட எமோசனல் வீடியோ

நான் ரஜினி போல் ஆக முயற்சிக்கிறேனே தவிர, ரஜினியாக மாற  முயற்சிக்கவில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

 
சமீபகாலமாக நடிகர் சிம்பு அவ்வப்போது வீடியோக்கள் மூலம் தனது ரசிகர்களுடன் பேசி வருகிறார்.
 
இந்நிலையில், நேற்று அவர் வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் மிகவும் உணர்வு பூர்வமாக பேசியுள்ளார்.
 
நான் என் தொழிலை மதிப்பதில்லை என பலரும் நினைக்கின்றனர். அது உண்மையில்லை. நான் சினிமாவை நேசிக்கிறேன். அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் ரஜினியாக மாற முயற்சி செய்கிறேன் என பலரும் கூறுகின்றனர். நான் அவரைப் போல மாற முயற்சிக்கிறேன் என்பதே உண்மை. இது பலருக்கும் புரியவில்லை. என்னால் ரோபோ போல் வேலை செய்ய முடியாது. அதனால்தான், படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவதாக என் மீது புகார் வருகிறது. சிறு வயதிலிருந்தே அப்படி பழகிவிட்டேன். அதை மாற்ற முயற்சி செய்கிறேன். 
 
நாளை இருப்பேனா? சினிமாவில் நடிப்பேனா என எனக்குத் தெரியாது. ரசிகர்களின் அன்பால்தான் என் சினிமா வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
 
சிம்பு ஏன் இவ்வளவு விரக்தியாக பேசியுள்ளார் என அவரின் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.