திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (12:02 IST)

நெருங்கி வா முத்தமிடாதே பாணியில் சமந்தா - சிம்புவின் படுரொமான்டிக் போட்டோ லீக்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமந்தா - சிம்புவின் நெருக்கமான ரொமான்டிக் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2016 ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடிகை மஞ்சிமா மோகனுக்கு பதிலாக முதலில் ஒப்பந்தமானது நடிகை சமந்தா தானாம். அந்த படத்திற்காக சமந்தா மற்றும் சிம்புவை வைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இது. பின்னர் அந்த படத்தின் பணிகள் தாமதமாக நடைபெற்றதால் அதிலிருந்து விலகிவிட்டாராம் சமந்தா.