வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2024 (09:55 IST)

3 முறை செத்து செத்து பிழைத்திருக்கின்றேன்.. ‘பாட்டுக்கு பாட்டு’ புகழ் அப்துல் ஹமீது கண்ணீர் வீடியோ..!

இலங்கை வானொலியின் தொகுப்பாளர் அப்துல் ஹமீத் திடீரென இறந்து விட்டதாக நேற்று வதந்தி பரவிய நிலையில் அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
 
நேற்று இரவு முதல் தனக்கு ஆயிரக்கணக்கானோர் போன் செய்தனர் என்றும் தான் உயிரோடு இருப்பதை அறிந்த பிறகு தான் அவர்கள் நிம்மதி அடைந்தார்கள் என்றும் இத்தனை பேர் என் மீது அன்பு வைத்திருப்பதை பார்க்கும்போது நான் என்ன தவம் செய்திருப்பேனோ என்றும் அவர் கண்ணீர் மல்க அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் 
 
ஒருவர் இறந்த பிறகு அவருக்கு எந்த அளவுக்கு மரியாதை கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் அதை நான் நேரில் பார்த்து விட்டேன், என் மீது இத்தனை உள்ளங்கள் அன்பு வைத்திருப்பதை பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்த வதந்தியை பரப்பியவருக்கு ஒரு வகையில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் வீடியோவில் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார். 
 
மேலும் என்னுடைய இறப்பு குறித்து வதந்தி பரப்பிய வரை ஏராளமானோர்  சாபமிட்டு இருப்பார்கள் என்றும், அந்த சாபம் அவருக்கு பலிக்க கூடாது என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே மூன்று முறை இதே போன்ற வதந்தி ஏற்பட்டு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு வதந்தி கிளம்பி உள்ளது என்றும் நான் நலமுடன் இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
Edited by Mahendran