திங்கள், 4 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2024 (08:08 IST)

எங்கள் தந்தைகளும் ஒரு காலத்தில் நண்பர்கள்தான் – சர்ச்சைகளுக்கு கபிலன் வைரமுத்து பதில்!

விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ நேற்று ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. இந்த பாடலை விஜய்யுடன் இணைந்து ஏ ஐ மூலமாக உருவாக்கப்பட்ட பவதாரணியின் குரலில் பாட வைத்துள்ளார்கள்.

இந்த பாடல் பற்றி பேசியுள்ள யுவன் “எனக்கு இந்த பாடல் மிகவும் ஸ்பெஷல் ஆனது. இந்த பாடலை நானும் வெங்கட் பிரபுவும் உருவாக்கும் போது பவதாரணி மருத்துவமனையில் இருந்தார். அவர் குணமாகி வந்ததும் அவரை பாட வைக்கலாம் என நினைத்தோம். ஆனால் ஒரு மணிநேரத்தில் அவர் இறந்த செய்தி வந்தது. அவரது குரலை நான் இப்படி பயன்படுத்துவேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. இதனை உருவாக்க என்னுடன் பணியாற்றிய குழுவுக்கு நன்றி” எனக் கூறியிருந்தார்.

இந்த பாடலை யுவன் இசையில் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். அவர்களின் தந்தைகளான இளையராஜாவும் வைரமுத்துவும் 40 ஆண்டுகளுக்கு மேலாக கருத்து வேறுபாடு காரணமாக இணைந்து பணியாற்றாமல் இருந்து வருகின்றனர். இந்த கருத்துக்குப் பதிலளித்துள்ள கபிலன் வைரமுத்து “தந்தைகள்க்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர்களும் ஒரு காலத்தில் நண்பர்கள்தான். நண்பர்கள் என்றாலே அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள், மோதல்கள் இருக்கதான் செய்யும். விமர்சகர்கள் இந்த பாடலில் வரும் “எல்லோரும் ஒன்றாக” என்ற வரியை பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.