தெலுங்கு சினிமாவில் பிரச்சனைகளை சந்தித்த சித்தார்த்… பல ஆண்டுகளுக்குப் பின் சமாதானம்!
நடிகர் சித்தார்த் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக சில ஆண்டுகளுக்கு முன்னர் நடித்து வந்தார்.
நடிகர் சித்தார்த் தமிழ் படத்தில் முதலில் அறிமுகமாகி இருந்தாலும், அவரை பிரபல கதாநாயகனாக்கியது தெலுங்கு படங்கள்தான். அங்கு அவருக்கென்று ஒரு மார்க்கெட் உருவாகி இருந்தது. ஆனால் அங்குள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் ஊடகங்களோடு மோதல் போக்கை கைக்கொண்டதால் அவரை தவிர்க்க ஆரம்பித்தனர். அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
அதனால் தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் இப்போது சில ஆண்டுகளுக்குப் பின்னர் சித்தார்த் தன் பிரச்சனைகளை எல்லாம் முடித்துக்கொண்டு மஹா சமுத்திரம் என்ற படத்தில் சர்வானந்தோடு நடித்து முடித்துள்ளார்.