செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (07:19 IST)

சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் ஆகியோரின் மன்னிப்பை ஏற்க முடியாது… சித்தார்த் கருத்து!

கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்போது பிற மொழிகளிலும் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கன்னட ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக சித்தார்த் பெங்களூருவில் ஒரு ப்ரஸ் மீட்டில் கலந்துகொண்ட பொது, சில கன்னட அமைப்புகளால் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது சம்மந்தமாக நடந்த சம்பவத்துக்கு சிவராஜ் குமார் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் சித்தார்த்திடம் மன்னிப்புக் கேட்டனர்.

இதுபற்றி இப்போது பேசியுள்ள சித்தார்த் “நான் பிரகாஷ் ராஜ் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரின் மன்னிப்பை ஏற்க முடியாது. ஏனென்றால் இந்த விஷயத்தில் அவர்கள் எந்த தவறையும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் மன்னிப்புக் கேட்டது அழகான விஷயம். அவர்களோடு எனக்கு எந்த பிரச்ச்னையும் கிடையாது. நாங்கள் அனைவரும் ஒரே நதியில்தான் குளிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.