திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2023 (19:09 IST)

''என்ன ஏமாத்த முடியாது ''விஜய்யின் 'லியோ' பட டிரைலர் ரிலீஸ்..ரசிகர்கள் கொண்டாட்டம்

leo vijay
விஜய்யின் 'லியோ' பட படத்தின் டிரைலர் இன்று சன்டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் லியோ.
 
இப்படத்தை  லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 
 
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து  செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.
 
இந்நிலையில் லியோ படத்திற்கு   நேற்று சென்சார் சான்றிதழ் வழங்கினர். அதன்படி, இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், லியோ பட டிரைலர் அறிவித்திருந்தபடி  இன்று மாலை 6: 30 மணிக்கு  சன் டிவியின் யூடியூப் சேனலில் ரிலீஸாகி உள்ளது. இதில்,அதிரடி மாஸ் ஆக்சன் காட்சிகளில் விஜய் நடித்துள்ளார். மன்சூர் அலிகான்,சஞ்சய்தத், திரிஷா,அர்ஜூன் என எல்லோருடைய பெர்பாமஸ்ன்சும் ரசிக்கும்படி உள்ளது. இதில், விஜய் இரட்டை வேடத்தில்  நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த டிரைலர்  நிச்சயம் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.