1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Did Vijay act with self-consciousness Rajeshwari Priya

விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? ராஜேஸ்வரி பிரியா

leo vijay
லியோ பட டிரைலர் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில்,  விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? என்று ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ.

இப்படத்தின் டிரைலர் இன்று சன்டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகி  மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்த டிரைலரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ள நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா தன் சமூக வலைதள பக்கத்தில்,

''லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா?

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?'' என்று பதிவிட்டுள்ளார்.

 ஏற்கனவே விஜய்யின் நா ரெடிதான் என்ற பாடல் வரிகளுக்கு எதிராக விஜய்க்கு எதிராகா அவர் புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரையில்
'லியோ' டிரைலர் திரையிடலுக்குப் பிறகு அதிர்ந்த 'ரோகிணி 'தியேட்டர்