விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்… சித்தார்த் சொன்ன ரகசியம்!
நடிகர் சித்தார்த் நண்பன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது பற்றி பேசியுள்ளார்.
நடிகர் சித்தார்த்தை தனது பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார் சித்தார்த். அதற்கடுத்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். ஒரு கட்டத்தில் தெலுங்கு படங்களில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிதததை அடுத்து அங்கு பிஸியானார். அதன் பின்னர் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் சித்தார்த் விஜய்யின் நண்பன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது பற்றி பேசியுள்ளார். நண்பன் படத்தில் ஜீவா நடித்த சேவல்கொடி செந்தில் வேடத்தில் நடிக்க இயக்குனர் ஷங்கர் சித்தார்த்தை கேட்டுள்ளார். ஆனால் அப்போது அவர் வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பை இழந்ததாக சித்தார்த் தெரிவித்துள்ளார்.