பீஸ்ட்டுக்கு பின்னரே எதற்கும் துணிந்தவன் ரிலிஸ்!
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் பீஸ்ட் திரைப்படத்துக்கு பின்னரே நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பல படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இப்போது நடித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு அடுத்தடுத்து ரிலிஸ் ஆக உள்ளன.
இந்நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலிஸ் ஆக இருந்த எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் கண்டிப்பாக ஏப்ரல் மாதம் இருக்கவேண்டும் என விஜய் தரப்பு பிடிவாதமாக இருக்கிறது. அதனால் பீஸ்ட் ரிலீஸாகி சில மாதங்கள் கழித்தே எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.