1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 20 ஜனவரி 2022 (11:18 IST)

ரோஹித் ஷர்மா வந்ததும் ராகுலின் இடம் என்ன? குழப்பமான பேட்டிங் ஆர்டர்!

இந்திய ஒரு நாள் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியில் இப்போது சிறப்பான தொடக்க ஆட்டக்காரர்கள் பலர் உள்ளனர். இதனால் தொடக்க ஆட்டக்காரர்களாக யாரை களமிறக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் ஷர்மா இல்லாததால் கே எல் ராகுலும் ஷிகார் தவானும் களமிறங்குகின்றனர். ஆனால் ரோஹித் ஷர்மா வந்த பின்னர் கே எல் ராகுலின் இடம் என்ன என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

கோலி கேப்டனாக இருந்த போது கே எல் ராகுலை நான்காவது வீரராக களமிறக்கி பின் வரிசை ஆட்டத்தை வலுப்படுத்தினார். ராகுலும் அந்த பொசிஷனில் சிறப்பாக விளையாண்டு வந்தார். இதனால் கே எல் ராகுலின் இடம் எதுவென்பதில் குழப்பம் நிலவுகிறது.