வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 11 மே 2020 (19:58 IST)

ஊரடங்கில் துவங்கிய சிபிராஜின் "கபடதாரி" பட வேலைகள்!

சிபிராஜ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கபடதாரி' .கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்துக்காக லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இப்படத்தை சத்யா சைத்தான் படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

இப்படத்தில் கதைக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரத்தில் நடிகை பூஜா குமார் நடித்துள்ளார்.  நந்திதா ஸ்வேதா ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் நாசர், மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. அந்தவகையில் படத்தின் post production பணிகளில் தீவிரம் காட்டியுள்ள படக்குழு டப்பிங் வேலைகளை விறு விறுப்பாக முடித்து வருகின்றனர்.