1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (18:38 IST)

'கபடதாரி' படப்பிடிப்பில் சிபிராஜுடன் இணைந்தார் நந்திதா!

'கபடதாரி' படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா.  
சிபிராஜின் 'கபடதாரி' படத்தின் டைட்டிலில் துவங்கி, நடிக்கும் நடிக நடிகையர், பங்கேற்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் படம் பற்றிய எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் சுவாரஸ்யசெய்தி ஒன்று கிடைத்துள்ளது. 
 
கதையின் நாயகனாக சிபிராஜ் இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக நந்திதா ஒப்பந்தமாகியிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி, சிறிதும் சிதையாமல் நடிக்கும் திறமை வாய்ந்த நந்திதா, ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் படக்குழுவினருடன் இணைந்தார்.இவர்களுடன் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் நடிக்கிறார்கள்.

 
நவம்பர் 1-ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பமான ‘கபடதாரி’ 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகளவில் வெளியாகும் எனபது குறிப்பிடத்தக்கது.